Vandinathai Summa Summa
Maaveeran (Original Motion Picture Soundtrack)
歌手:Maragathamani
专辑:《Maaveeran (Original Motion Picture Soundtrack)》



வண்டினத்தை சும்மா சும்மா
பட்டுப்பூ வாட்டுது அம்மா
மாலைப்போதில் உம்மா உம்மா
முத்துபோல் வழங்கிடு அம்மா

ஆசைதான் தாக்கும் இங்கே
அணைத்திட தாவும் நெஞ்சே
தாபம் தீரம்மா

சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
புது தென்றலைப்போலே தொடாதா என் மான்
சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
புது தென்றலைப்போலே தொடாதா என் மான்

~ இசை ~

பூவும் இங்கு தன்னைத்தான்
தீண்டும் காற்றைத் திட்டாதே
மயங்கும்போது கொஞ்சிடும் என் மலரே

பூவில் நீயும் கை வைக்காதே
பூவைச்சுற்றி முள் உண்டே
அல்லி கொஞ்சம் மெல்ல குத்தாதா

தாகமான நெஞ்சம் தான்
தள்ளி என்றும் நிற்காதே
வெறுப்பு ஏன்டி கூறடி பெண்மானே

நெருப்பு மெல்ல உரு மாற
உரிமை வாய்த்து விளையாடத்தான்
வஞ்சி என்னை மாற்றுது உன் பேச்சா

வளர்க்காதல் வரம் அதை வழங்காய் அம்மா
நீ முறைத்தாலும் உனை பெறுவேனே அம்மா
சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
புது தென்றலைப்போலே தொடாதா என் மான்

~ இசை ~

காற்றும் நின்னைத் தாக்கிடுதே
கதிரும் நின்னைத் தாக்கிடுதே
நானும் நின்னைத் தாக்கினால் தப்பா

காற்று பூவை தாக்காது
கதிரும் என்னை சாய்க்காது
ரெண்டும் நீயா தாங்காதப்பா

மழையின் சாரல் தீண்டாதா
சிதறும் தூரல் தீண்டாதா
பாரபட்சம் பார்ப்பதும் முறையா

மழையும் எந்தன் பூமேனி
கழுவும் என்னை புதிதாக்கி
ஏடாகூட போட்டிகள் உனக்கேன்டா

அது பெண்ணுக்குண்மையில் துணையாய் ஆகிடுமா
உனை நிழலாய்த்தொடர்ந்து நான் வருவேனம்மா
சிறு பூவாய் நெஞ்சொடு கொஞ்சாதா பொன்மான்
புது தென்றலைப்போலே தொடாதா என் மான்


更多>> Maragathamani的热门歌曲