歌手:
Harris Jayaraj
专辑:
《KO》அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே
ரோஜாப்பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
பேனா முள்ளில்
இந்த பூவும் பூத்ததொரு மாயம்
மாறி மாறி
உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
காதல் பொங்கி வருதே
அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே
~ இசை ~
வா என சொல்லவும் தயக்கம்
மனம் போ என தள்ளவும் மறுக்கும்
இங்கு காதலின் பாதையில் அனைத்தும்
அட பெரும் குழப்பம்
ஆறுகள் அருகினில் இருந்தும்
அடைமழை அது சோவென பொழிந்தும்
அடி நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
நா வரண்டும் விடும்
ஹே கூவா கூவா கூவா கூவா குயிலேது
ஹே தவ்வா தவ்வா தவ்வா தவ்வா மனமேது
ஓ முதல்மழை நனைத்ததைப் போலே
முதல் புகழ் அடந்ததைப் போலே
குதிக்கிறேன் குதிக்கிறேன் மேலே ஆருயிரே
ஓ எனக்குனை கொடுத்தது போதும்
தரைத்தொட மறுக்குது பாதம்
எனக்கினி உறக்கமும் தூரம் தேவதையே
அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே
~ இசை ~
கால்களில் ஆடிடும் கொலுசு
அதன் ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது
நான் கவியரசு
மேற்கிலும் சூரியன் உதிக்கும்
நீர் மின்மினி சூட்டிலும் கொதிக்கும்
அட அருகினில் நீ உள்ள வரைக்கும்
மிக மண மணக்கும்
ஹே பூவா பூவா பூவா பூவா சிரிப்பாலே
ஹே அவ்வா அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே
ஹே சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலன் இல்லை
விடாமலே மனதினில் தொல்லை காதலியே
தொடத் தொட இனித்தடை இல்லை
இடைவெளி மிகப்பெரும் தொல்லை
அடையலாம் மகிழ்ச்சியின் எல்லை கூடலிலே
அமளி துமளி நெளியும் valley
எனை கவ்விக் கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி
எனை அள்ளிச் சென்றதே
கொலம்பஸ் கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
கொளுத்தும் வெயிலிலும் எனக்குள்ளே
குளிர்க்காற்றும் வீசுதே
ரோஜாப்பூவும்
அடி முள்ளில் பூக்கும் என அறிவேனே
பேனா முள்ளில்
இந்த பூவும் பூத்ததொரு மாயம்
மாறி மாறி
உன்னைப் பார்க்க சொல்லி விழி கெஞ்சும்
எந்தன் நெஞ்சோடு நெஞ்சோடு
காதல் பொங்கி வருதே